பிஎஸ்எல்வி ராக்கெட்டின் 25 ஆண்டு கால பயணத்தில் இது வரலாற்று வெற்றி- இஸ்ரோ சிவன்
பிஎஸ்எல்வி ராக்கெட்டின் 25 ஆண்டு கால பயணத்தில் இது வரலாற்று வெற்றி என இஸ்ரோ தலைவர் சிவன் கூறி உள்ளார்.
ஸ்ரீஹரிகோட்டா,
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட், இன்று மாலை 3.25 மணிக்கு 1வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட்டில் இந்தியாவுக்கு சொந்தமான பூமி கண்காணிப்பு செயற்கைகோளான ‘ரீசாட்-2பிஆர்1’ என்ற செயற்கைகோள் பொருத்தப்பட்டு உள்ளது.
இதன் இறுதிக்கட்ட பணியான 23 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ (22 மணிநேரம் 45 நிமிடம்) நேற்று மாலை 4.40 மணிக்கு தொடங்கியது.. ‘கவுண்ட்டவுனை’ முடித்து கொண்டு திட்டமிட்டப்படி இன்று மாலை 3.25 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இதன்பின்பு 15 நிமிடங்களில் ராக்கெட் விண்வெளியில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறியதாவது:-
பிஎஸ்எல்வி ராக்கெட்டின் 25 ஆண்டு கால பயணத்தில் இது வரலாற்று வெற்றி. பிஎஸ்எல்வி ராக்கெட்டின் 50வது பயணம் வெற்றி அடைந்து உள்ளது. இஸ்ரோவின் கடந்த கால மற்றும் நிகழ்கால முன்னோடிகளால் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது என கூறினார்.
குழுவில் பணியாற்றிய ஒவ்வொருவரின் பெயரை கூறியும் இஸ்ரோ தலைவர் சிவன் வாழ்த்து தெரிவித்தார்.