தெலுங்கானா என்கவுண்ட்டர்: சட்டத்தை யாரும், தங்கள் கையில் எடுத்துக்கொள்ள கூடாது - மேனகா காந்தி

தெலுங்கானா என்கவுண்ட்டர் சம்பவத்திற்கு பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான மேனகா காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Update: 2019-12-07 07:46 GMT
புதுடெல்லி,

தெலுங்கானா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலையில் தொடர்புடைய 4 பேர் என்கவுண்ட்டர் செய்யப்பட்டதற்கு மேனகா காந்தி  எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

டெல்லியில் பாரதீய ஜனதா எம்பியும், மூத்த தலைவருமான மேனகா காந்தி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தெலுங்கானா என்கவுண்ட்டர் சம்பவம்,  ஒரு கொடூரமான முன்னுதாரணம். அவரவர் விருப்பப்படி மற்றவர்களை கொல்ல முடியாது, சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ள முடியாது, குற்றவாளிகளை நீதிமன்றங்கள் தான் தூக்கிலிட்டிருக்க வேண்டும் என்றார்.

இந்த என்கவுண்ட்டருக்கு அகில இந்திய முற்போக்கு பெண்கள் சங்கம், தேசிய பெண்கள் கூட்டமைப்பு ஆகியவையும் கண்டனம் தெரிவித்துள்ளன.

மேலும் செய்திகள்