நியூட்ரினோ திட்டப்பகுதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலத்திற்குள் இல்லை - வைகோ கேள்விக்கு, மத்திய மந்திரி பதில்
தமிழகத்தில் நியூட்ரினோ திட்டப்பகுதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலத்திற்குள் இல்லை என வைகோவின் கேள்விக்கு, மத்திய மந்திரி பதில் அளித்தார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கேள்வி ஒன்றை எழுப்பினார். அதாவது, “தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க அரசு திட்டம் வகுத்துள்ளதா?” என்று கேட்டிருந்தார்.
அதற்கு பிரதமர் சார்பில், அவரது துறைகளுள் ஒன்றான பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை மந்திரி ஜிதேந்திர சிங் விளக்கம் அளித்தார். அவர் பதில் அளிக்கும்போது, “இந்திய தளத்தில் இருந்து நியூட்ரினோ துகள்களை ஆய்வு செய்யும் திட்டத்தை தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் மேற்கொள்ள அரசு திட்டம் வகுத்து இருக்கின்றது. அந்த திட்டத்திற்கு அந்தப் பகுதியில் உள்ள சில பிரிவு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். எனவே, தேனி, மதுரை மாவட்டங்களில், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், செய்தியாளர்கள், தொலைக்காட்சி ஊடகங்களுக்கு நியூட்ரினோ திட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் அமைகின்ற பகுதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலத்திற்குள் இடம்பெறவில்லை” என்று கூறினார்.