ஜே.என்.யூ. விடுதி கட்டணம் உயர்த்தப்பட்டது ஏன்? மத்திய மந்திரி விளக்கம்

ஜே.என்.யூ. விடுதி கட்டணம் உயர்த்தப்பட்டது குறித்து மாநிலங்களவையில் மத்திய மந்திரி விளக்கம் அளித்தார்.

Update: 2019-12-05 12:20 GMT
புடெல்லி,

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு  பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதி கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து, ஒரு மாதத்திற்கும் மேலாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து,  உயர்த்தப்பட்ட விடுதி கட்டணம் கணிசமாக குறைக்கப்பட்டது. ஆனால், கட்டண உயர்வை முழுமையாக திரும்ப பெறக்கோரி  மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். விரைவில் நடைபெற உள்ள பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளையும் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட மாணவ அமைப்புகள் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில்,  மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி போக்ரியால் நிஷாங்க், மாநிலங்களவையில், விடுதி கட்டண உயர்வு  தொடர்பாக எழுத்துப்பூர்வமாக கேட்கப்பட்ட கேள்விக்கு அளித்த பதிலில் கூறியதாவது:- “விடுதி பரமாரிப்பு செலவு அதிகமானதால்,  அதை ஈடுகட்டவே  விடுதி கட்டணம் உயர்த்தப்பட்டது. 

லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை என்ற அடிப்படையில் விடுதியை நடத்தவே கட்டணம் உயர்த்தப்பட்டது.  40 ஆண்டுகளுக்கு பிறகே, விடுதி அறையின் கட்டணத்தை பல்கலைக்கழகம் உயர்த்தியது” என்றார்.

மேலும் செய்திகள்