இறந்தவருடன் சென்ற ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியது; 6 பேர் பலி

இறந்தவருடன் சென்ற ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கிய சம்பவத்தில் 6 பேர் பலியாகினர்.;

Update: 2019-12-01 20:30 GMT
காத்மாண்டு,

நேபாள நாட்டில் உதயபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சிவ மாயா. இவர் விராட்நகர் பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலுடன் ஆம்புலன்சில் உறவினர்கள், வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.

வழியில், சன்சாரி மாவட்டத்தில் எதிரில் வந்த சரக்கு லாரியுடன் ஆம்புலன்ஸ் நேருக்குநேர் மோதியது. இதில், ஆம்புலன்ஸ் டிரைவரும், இறந்த சிவ மாயாவின் 2 மகன்கள் உள்பட 5 உறவினர்களும் உயிரிழந்தனர். சரக்கு லாரியின் டிரைவர் காயமடைந்தார்.

மேலும் செய்திகள்