தேசியக் குடிமக்கள் பதிவேடு முறை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் - ராஜ்நாத் சிங்

தேசியக் குடிமக்கள் பதிவேடு முறை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் என்று ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Update: 2019-12-01 17:37 GMT
பொக்காரோ,

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலையொட்டி, பொக்காரோவில் இன்று நடந்த பா.ஜனதா பிரசார கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் தேசியக் குடிமக்கள் பதிவேட்டு முறையை நடைமுறைப்படுத்தப்படும். இந்த மண்ணில் யார் சட்டவிரோதமாக குடியேறி இருக்கிறார்கள் என்பதை ஒவ்வொரு இந்தியரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் சில கட்சிகள் இதனை விமர்சனம் செய்கின்றன. அவர்கள் இந்த நடவடிக்கையை மதம் சார்ந்த பிரச்சனையாக்குகின்றனர்.

அயோத்தியில் மிக பிரமாண்டமான ராமர் கோவிலை கட்ட இருக்கிறோம். உச்சநீதிமன்றத் தீர்ப்பையடுத்து ராமர் கோவில் கட்டுவதற்கு இருந்த தடை நீங்கியுள்ளது. நாங்கள் ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் அளித்த வாக்குறுதியை இப்போது நிறைவேற்ற இருக்கிறோம்” என்று ராஜ்நாத்சிங் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்