மணிப்பூர் சட்டசபை அருகே குண்டு வீச்சு - 2 போலீசார் காயம்

மணிப்பூர் சட்டசபை அருகே நடத்தப்பட்ட குண்டு வீச்சில் 2 போலீசார் காயமடைந்தனர்.

Update: 2019-11-22 19:28 GMT
இம்பால்,

மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் சட்டசபை வளாகம் அருகே நேற்று பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். வளாகத்தின் முன்பக்க நுழைவுவாயிலுக்கு வெளியே இந்த குண்டு வீசப்பட்டது. கையெறி குண்டு சிதறல்கள் பட்டதால், சட்டசபை வளாகத்தில் காவல் பணியில் இருந்த 2 மத்திய ரிசர்வ் படை போலீசார் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்