உளவு பார்க்கப்பட்ட விவகாரம்: ‘வாட்ஸ்அப்’ நிறுவனம் வருத்தம் தெரிவித்தது

உளவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பக ‘வாட்ஸ்அப்’ நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.

Update: 2019-11-20 22:00 GMT
புதுடெல்லி,

இந்திய பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்பட 121 பிரபலங்களின் வாட்ஸ்அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இஸ்ரேலிய மென்பொருளான ‘பெகாசஸ்’ மூலம் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக மத்திய அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதைத்தொடர்ந்து இந்தியர்களின் தகவல்கள் தொடர்பான பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என வாட்ஸ்அப் நிறுவனத்தை மத்திய அரசு வலியுறுத்தியது. இதுபோன்று மேலும் புகார்கள் வெளியானால், அவற்றை பொறுத்துக்கொள்ள முடியாது எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்த விவகாரத்தில் தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் வருத்தம் தெரிவித்து உள்ளது. மேலும் இந்த பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவர தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு இருப்பதாகவும் வாட்ஸ்அப் நிறுவனம் உறுதியளித்து இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் செய்திகள்