சணல் பையில் திருப்பதி லட்டு

சணல் பையில் திருப்பதி லட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.

Update: 2019-11-19 20:30 GMT
திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் வழங்கும் கவுண்ட்டர்களில் பிளாஸ்டிக் பைகளுக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே லட்டு பிரசாதங்களை வைக்க ஒரு பிளாஸ்டிக் கவர் ரூ.3-க்கு விற்பனை செய்யப்பட்டது. அந்தப் பிளாஸ்டிக் கவர்களை உடனடியாக ரத்து செய்து, அதற்கு பதிலாக அட்டை பெட்டி, சணல் பை ஆகியவைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வருகிற பொங்கல் பண்டிகையில் இருந்து திருமலையில் நிரந்தரமாக பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட உள்ளது. அதற்கு பக்தர்களும், வியாபாரிகளும் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்