டெல்லியில் இன்று காற்று மாசு குறைந்துள்ளது - மத்திய ஆய்வு நிறுவனம் தகவல்

டெல்லியில் இன்று காற்று மாசு குறைந்து காற்றின் தரம் மேம்பட்டுள்ளதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.;

Update: 2019-11-19 06:11 GMT
புதுடெல்லி,

கடந்த சில நாட்களாக டெல்லியில் மிக கடுமையான நிலையில் இருந்து வந்த காற்று மாசு, இன்று காலை குறைந்துள்ளது. வாகன புகை மற்றும் விவசாய நிலங்களில் எரிக்கப்படும் காய்ந்த சருகுகள் ஆகியவற்றால் டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று டெல்லியில் காற்றின் தரம் சற்று மேம்பட்டுள்ளது. காற்றின் தரக் குறியீடு 218 ஆக உள்ளது. இதனால் டெல்லி மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

மத்திய அரசின் காற்று தர அமைப்பு மற்றும் வானிலை முன்னறிவிப்பு நிறுவனமான சஃபார் (SAFAR) வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, காற்றின் வேகம் நாளை குறையும் போது, மீண்டும் காற்று மாசு அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்