பள்ளிக்கூடத்தில் கொதிக்கும் சாம்பாரில் விழுந்து சிறுவன் பலி

பள்ளிக்கூடத்தில் கொதிக்கும் சாம்பாரில் விழுந்து 6 வயது சிறுவன் பலியானான்.;

Update: 2019-11-15 12:56 GMT
கர்னூல் 

ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் பன்யம் பகுதியில் உள்ளது தனியாருக்கு சொந்தமான உண்டு உறைவிட பள்ளி. இந்த பள்ளியில் ஆர்வக்கல் மண்டலம்  திப்பாய்பள்ளியைச் சேர்ந்த 6 வயது சிறுவன் புருஷோத்தம் யூகேஜி படித்து வந்தான்.

நேற்று சிறுவன் புருஷோத்தம் சமையல் அறையில் கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்து விட்டான். இதில் உடல் முழுவதும் காயம் அடைந்த சிறுவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தான். இது குறித்து பன்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளியின் நிர்வாக இயக்குனர் விஜய் குமார் ரெட்டி மற்றும் தாளாளர்  நாக மல்லேஸ்வர் ரெட்டி ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்