இந்தியர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவு இந்த ஆண்டு குறைந்த தங்கமே வாங்கி உள்ளனர்

இந்தியாவில் 2019 ஆம் ஆண்டில் மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவு மிக குறைந்த அளவே தங்கத்தை வாங்கியுள்ளனர் என உலக தங்க கவுன்சில் (WGC) தெரிவித்துள்ளது.;

Update: 2019-11-06 11:37 GMT
புதுடெல்லி

உலக தங்க கவுன்சிலின் இந்திய நடவடிக்கைகளின் நிர்வாக இயக்குனர் பி.ஆர்.சோமசுந்தரம் கூறியதாவது:-

இந்தியாவில் தங்கத்தின் தேவை குறைந்து வருகிறது. 2019 ஆம் ஆண்டில்  தங்கத்தின் தேவை ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததைவிட 8 சதவிகிதம் குறைந்து 700 டன்களாக இருக்கிறது. இது 2016-க்குப் இது பிறகு மிகக் குறைவு ஆகும்.

செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் இந்தியாவின் தங்கம் வாங்குவது ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததைவிட கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு சரிந்து 123.9 டன்னாக  உள்ளது.

தங்கத்தின் அதிக விலை ஏற்றத்தால் கிராமப்புறங்களின் தங்க நகைகள் வாங்குவது வெகுவாக குறைந்து உள்ளது. இந்தியாவின் மூன்றில் இரண்டு பங்கு தங்க நகைகள்  கிராமப்புறங்களிலிருந்தே வாங்கப்படுகிறது.  அங்கு நகைகள் ஒரு பாரம்பரிய செல்வ சேமிப்பாக கருத்தப்படுகிறது.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய உலோக சந்தையில் வாங்கும் விகிதம் 2019 ஆம் ஆண்டில் இதுவரை 17 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்து உள்ளது. இது  உலகளாவிய விலையை உயர்த்தக்கூடும், ஆனால் இறக்குமதியின் வீழ்ச்சி நாட்டின் வர்த்தக பற்றாக்குறையை குறைக்கவும், ரூபாயின் மதிப்பை ஆதரிக்கவும் உதவும்.

செப்டம்பரில் தங்கம் 10 கிராமுக்கு 39,885 ரூபாய் (3 563.85) என்ற உயர்ந்தது. அவை 2019 ஆம் ஆண்டில் 22  சதவிகித விலை உயர்வு ஆகும். இது ரூபாயின் மதிப்பு குறைவதையும் பிரதிபலிக்கிறது.

ஜூலை முதல் வாரத்தில், தங்கம் மீதான இறக்குமதி வரியை 10  சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக இந்தியா உயர்த்தியது. உள்நாட்டு  தங்கத்தின் விலை உயர்வு மற்றும் இறக்குமதி வரி உயர்வு ஆகியவை ஜூலை-செப்டம்பர் மாதங்களில் தங்கத்தின் இறக்குமதியை குறைத்தன.

ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில் இந்தியர்கள் 123.9 டன் தங்கத்தை வாங்கியுள்ளனர், இது முந்தைய ஆண்டைவிட 32 சதவீதம் குறைந்து உள்ளது.  இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் தங்கத்தின் நுகர்வு  5.3 சதவீதம்  குறைந்து 496 டன்னாக உள்ளது.

ஜூலை-செப்டம்பர் மாதங்களில் நிகர இறக்குமதி 66 சதவீதம்  குறைந்து 80.5 டன்னாக  இருந்தது என்று உலக தங்க கவுன்சில் தெரிவித்து உள்ளது.

வழக்கமாக திருமண சீசன் மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகள் காரணமாக அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் தங்க தேவை அதிகரிக்கும், அப்போது தங்கம் வாங்குவது நல்லதாக கருதப்படுகிறது.

அக்டோபரில் இந்தியா 38 டன் தங்கத்தை இறக்குமதி செய்தது, இது ஒரு வருடம் முன்பு 57 டன்னாக இருந்தது. இறக்குமதி 33 சதவீதம் குறைந்துள்ளது என்று அரசு வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்