பிராந்திய பொருளாதாரக் கூட்டுறவு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாது எனத்தகவல்

பிராந்திய பொருளாதாரக் கூட்டுறவு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Update: 2019-11-04 12:42 GMT
பாங்காங்,

தாய்லாந்தின் பாங்காக் நகரில் ஆசியான் மாநாடு நடந்து வருகிறது. அதில் பிராந்திய பொருளாதாரக் கூட்டுறவு ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி கையொப்பம் இட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.  

இந்த ஒப்பந்தத்தால் வெளிநாடுகளில் இருந்து தடையில்லாமல் பொருட்கள் இந்தியாவுக்குள் இறக்குமதியாகும். இதனால் உள்நாட்டில் சிறு குறு நிறுவனங்களில் வேலையிழப்பும், சிறு வணிகர்களின் பொருளாதாரமும் நசியும் என்று பரவலாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. 

இந்த நிலையில்,  பிராந்திய பொருளாதாரக் கூட்டுறவு ஒப்பந்தத்தில் (RCEP) இந்தியா கையெழுத்திடாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. முக்கிய விவகாரங்களில் எந்த சமரசமும் செய்யப்படாது என்றும் இந்தியாவின் கவலைகளுக்கு தீர்வு எட்டப்படவில்லை என்பதால், பிரதமர் உறுதியாக இருப்பதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது. 

 பிராந்திய பொருளாதாரக் கூட்டுறவு ஒப்பந்தம் தனது உண்மையான நோக்கத்தை பிரதிபலிக்கவில்லை எனவும், ஒப்பந்தத்தின் முடிவுகள் நியாயமற்றதாக இருப்பதாகவும்  இந்தியா தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

 

மேலும் செய்திகள்