டெல்லியில் உள்ள பிரதமர் வீட்டை ராஷ்டிரபதி பவன் அருகே மாற்ற திட்டம்?

டெல்லியில் உள்ள பிரதமர் வீட்டை ராஷ்டிரபதி பவன் அருகே மாற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Update: 2019-11-03 09:31 GMT
புதுடெல்லி,

டெல்லியில் உள்ள பாராளுமன்ற கட்டிடம் போதிய இடவசதி இல்லாமல் இருப்பதுடன் பழங்கால கட்டிடம் என்பதால் பல்வேறு பாதிப்புகளுடன் இருக்கிறது. எனவே பாராளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவது என்ற திட்டம் மத்திய அரசிடம் உள்ளது. 

மேலும் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இருந்து இந்தியா கேட்டில் உள்ள ராஜபாதை முழுவதிலும் புதிய கட்டிடங்கள் உருவாக்கி பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

இந்நிலையில்  பிரதமர் வீடு தற்போது லோக் கல்யாண் மார்க்கில் உள்ளது. அதை டல்ஹவுசி சாலையில் ரைசினா ஹில்லுக்கு அருகில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது உள்ள பிரதமர் வீடு, அலுவலகங்களையும் வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. பல்வேறு கட்ட ஆலோசனைக்கு பிறகு தான் முடிவு எடுக்கப்படும் என்று மத்திய நகர்ப்புற மந்திரி ஹர்தீப்சிங் பூரி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்