"விதி என்பது கற்பழிப்பு போன்றது அனுபவிக்க முயற்சி செய்யுங்கள்" சர்ச்சையை ஏற்படுத்திய காங்கிரஸ் எம்பி மனைவியின் பதிவு

"விதி என்பது கற்பழிப்பு போன்றது, அதை நீங்கள் எதிர்க்க முடியாவிட்டால் அதை அனுபவிக்க முயற்சி செய்யுங்கள்" என்ற காங்கிரஸ் எம்பி மனைவியின் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2019-10-22 11:09 GMT
எர்ணாகுளம்,

கேரள மாநிலம் எர்ணாகுளம் நாடாளுமன்ற தொகுதி  காங்கிரஸ் எம்.பி. ஹிபி ஏடன், இவரது மனைவி அன்னா லிண்டா ஏடன். இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு   'கற்பழிப்பு ஜோக்'  என்ற தலைப்பில் ஒரு பதிவை வெளியிட்டார். தற்போது அது வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

“விதி என்பது கற்பழிப்பு  போன்றது, அதை நீங்கள் எதிர்க்க முடியாவிட்டால் அதை அனுபவிக்க முயற்சி செய்யுங்கள்” என்று ஒரு கண் சிமிட்டும் ஈமோஜியுடன் பதிவு செய்து இருந்தார்.

ஒரு உணர்ச்சியற்ற நகைச்சுவை பதிவின்  மூலம் "கற்பழிப்பை பெரிய விஷயமல்ல" என கூறியதற்கு சிலர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

சிலர் இந்த பதிவு வருத்தமளிப்பதாகவும், கற்பழிப்பில்  இருந்து தப்பிப்பிழைத்தவர்களுக்கும் அவர்களின் அன்புக்குரியவர்களுக்கும்   இந்த பதிவு மிகவும்  புண்படுத்தும் பதிவாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டினர்.

அன்னா லிண்டா ஏடன் கருத்தை விமர்சிக்க ‘SayNoToRapeJokes’ மற்றும் #EndRapeJokeFilth போன்ற ஹேஷ்டேக்குகள் உருவாக்கி  வைரலாக்கப்பட்டன.

இதை தொடர்ந்து அன்னா லிண்டா ஏடன் ஒரு விரிவான பதிவில் அவர்,  தனது பள்ளி நாட்களில் கேள்விப்பட்ட ஒரு நடிகரின் கருத்தை பிரதிபலித்ததாகவும்   "நான் மிகவும் கடினமான நேரத்தை அனுபவித்துக்கொண்டிருந்தேன். பல பெண்கள் எதிர்கொள்ள வேண்டிய ஒரு பயங்கரமான நிலையை நான் அவமதிக்க முயற்சிக்கவில்லை. இதுபோன்ற ஒரு தவறான புரிதல் எனது பதிவில் நிகழ்ந்ததில் நான் மிகவும் வருத்தப்படுகிறேன். அதில் எனது வருத்தத்தை தெரிவிக்கிறேன்" என வருத்தம் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்