புதுச்சேரியில் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை - முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி மாநிலத்தில் தீபாவளிக்கு மறுநாள் பொது விடுமுறை விட தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.;

Update: 2019-10-22 06:09 GMT
புதுச்சேரி,

தீபாவளி பண்டிகை வரும் 27-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, தீபாவளிக்கு மறுநாள் 28-ம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை என்று தமிழக அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது. விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 9-ம் தேதியை பணிநாளாக அறிவித்து அரசு அரசாணையை நேற்று வெளியிட்டது.

இந்நிலையில் தற்போது தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் பொதுவிடுமுறை விட தலைமைச்செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும் அக்டோபர் 28-ந் தேதிக்கு பதிலாக நவம்பர் 9-ம் தேதி பணிநாளாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்