இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளவர்களுக்கு அரசு வேலை இல்லை

இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளவர்களுக்கு இனி அசாமில் அரசு வேலை இல்லை.

Update: 2019-10-22 05:21 GMT
கவுகாத்தி,

அசாமின்  மாநில அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொண்டவர்களுக்கு  அரசாங்க வேலை இல்லை என்ற முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இந்தக் கொள்கை  முடிவு ஜனவரி 1, 2021 முதல் நடைமுறைக்கு வரும்.

அமைச்சரவை ஒரு புதிய நிலக்கொள்கை முடிவையும் எடுத்து உள்ளது. இந்த முடிவின் படி  நிலமற்ற பழங்குடி மக்களுக்கு விவசாயத்திற்கு 3 பிக்ஹாக்கள் (43,200 சதுர அடி) நிலமும் வீடு கட்டுவதற்கு அரை பிக்ஹா வழங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் பயன்பெறுபவர் 15 வருட பயன்பாட்டிற்குப் பிறகுதான் நிலத்தை விற்க முடியும்.

அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஒருவர் "அசாமில் நிலம் மற்றும் வளங்கள் மீது அழுத்தம் கொடுக்க மக்கள் கொள்கையை நடைமுறைப்படுத்துவது அவசியம். நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்குவதும் எங்கள் கடமைகளில் ஒன்றாகும் என கூறினார்.

அமைச்சரவை  கூட்டத்தில் பஸ் கட்டணங்களை 25 சதவீதம்  அதிகரிப்பது மற்றும் கல்வியாளர் இந்திரா மிரி பெயரிடப்பட்ட திட்டத்தின் கீழ் விதவைகளுக்கு மாதத்திற்கு ரூ. 300 வழங்குவது, கடந்த ஏப்ரல் 1 அல்லது அதற்குப் பிறகு விதவைகளான பெண்களுக்கு ஒரு முறை ரூ.25,000 மானியம் வழங்கவும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்