மாலை 5 மணி நிலவரப்படி அரியானாவில் 51.93% மராட்டியத்தில் 44.05% வாக்குப்பதிவு

மாலை 5 மணி நிலவரப்படி அரியானாவில் 51.93% வாக்குகளும், மராட்டியத்தில் 44.05% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

Update: 2019-10-21 12:14 GMT
மும்பை

மராட்டியம், அரியானா மாநில சட்டசபை தேர்தல்களுக்கு இன்று காலை  முதல்  வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெறும் மராட்டிய மாநில சட்டசபைக்கும், பாரதீய ஜனதா ஆட்சி நடைபெறும் அரியானா சட்டசபைக்கும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.  மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா- சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மற்றொரு அணியாக போட்டியிடுகின்றன.

90 உறுப்பினர்களை கொண்ட அரியானாவில், ஆளும் பாரதீய ஜனதா, காங்கிரஸ், ஜனநாயக் ஜனதா ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், மராட்டியம் மற்றும் அரியானாவில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணியளவில் தொடங்கியது.  இதற்காக காலையிலேயே வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களிக்க வந்தனர்.

புனேவில் உள்ள என்.சி.எல். பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் வாக்களித்தார்

மும்பை பாந்த்ரா (மேற்கு)  வாக்குச்சாவடியில் நடிகர்  சல்மான் கான் வாக்களித்தார்.

அரியானா மற்றும் மராட்டியத்தில்  காலை 9 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு  8.73 சதவீதம் மற்றும் 5.46 சதவீதமாக இருந்தது.

அரியானா மற்றும் மராட்டியத்தில்  காலை 10 மணி நிலவரப்படி  வாக்குப்பதிவு  8.92 சதவீதம்  மற்றும் 5.77 சதவீதமாக இருந்தது.

அரியானா மற்றும் மராட்டியத்தில்  12 மணி  நிலவரப்படி  வாக்குப்பதிவு  23.12 சதவீதம்  மற்றும்16.28  சதவீதமாக இருந்தது.

பிற்பகல் 2 மணி நிலவரப்படி அரியானாவில் 37.12% வாக்குகளும், மராட்டியத்தில்  30.75% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

அரியானாவில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி  39.58% வாக்குகள் பதிவாகியுள்ளன. மராட்டியத்தில்  31.54 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

மாலை 4 மணி நிலவரப்படி அரியானாவில் 50.59 சதவீத  வாக்குகளும், மராட்டியத்தில் 43.70 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

மாலை 5 மணி நிலவரப்படி அரியானாவில் 51.93 சதவீத  வாக்குகளும், மராட்டியத்தில்  44.05 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

மேலும் செய்திகள்