தமிழ்மொழி அழகானது: தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் - பிரதமர் மோடி

தமிழ்மொழி அழகானது என்றும், தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்றும் பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.;

Update: 2019-10-20 17:06 GMT
புதுடெல்லி,

கடந்த சில நாட்களுக்கு முன் சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான சந்திப்புக்காக பிரதமர் மோடி தமிழகம் வந்திருந்தார். கோவளத்தில் கடற்கரையோரமுள்ள நட்சத்திர விடுதியில் அவர் தங்கியிருந்தார். மாமல்லபுரம் கடலோரம் நடைபயிற்சி மேற்கொண்ட அவர், கடல் அலைகளில் கால் நனைத்துக் கடலோடு உரையாடியதைக் கவிதையாக பதிவிட்டிருந்தார். இந்தியில் வந்த அந்தக் கவிதையை தமிழில் மொழி பெயர்ப்பு செய்து டுவிட்டரில் பதிவிட்டிருந்திருந்தார்.

இந்நிலையில் தமிழ்மொழி மிகவும் அழகானது, தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என பிரதமர் மோடி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். சிறந்த கலாச்சாரத்தைக் கொண்ட தமிழ் மொழியில் எனது எண்ணங்களை வெளிப்படுத்தியது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இயற்கையை மதித்து நடப்பது நமது நெறிமுறை . இயற்கை தெய்வீகத்ததையும், மகத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் விவேக் மற்றும் தயாரிப்பாளர் தனஞ்செயன் ஆகியோரின் டுவிட்களுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்