பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்: தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 5 பாக். வீரர்கள் பலி என தகவல்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 5 பாகிஸ்தான் வீரர்கள் பலி என தகவல்கள் தெரிவிக்கின்றன.;

Update: 2019-10-20 07:56 GMT
ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலம், டங்தார் செக்டார் பகுதியில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில், தீவிரவாதிகள், இந்தியாவிற்குள் ஊடுருவுவதற்கு உதவி செய்யும் வகையில், பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய வீரர்கள் இரண்டு பேர் வீரமரணம் அடைந்தனர். பொது மக்களில் ஒருவரும் உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்துள்ளனர்.

இதற்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது. டங்தார் எல்லை அருகே உள்ள பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பாக்.தீவிரவாத  முகாம்கள்  மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில்  4 முதல் 5 பாகிஸ்தான் வீரர்கள் வரை பலியானதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்திய ராணுவம் நடத்திய பீரங்கி தாக்குதலில் மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் நீலம் பகுதியில் உள்ள 4 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக  கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்