உத்தரபிரதேசத்தில் வழக்கறிஞர் சுட்டு கொலை
உத்தரபிரதேசத்தில் வழக்கறிஞர் சுட்டு கொலை செய்யப்பட்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீரட்,
முகேஷ் ஷர்மா (58) என்பவர் மீரட்டில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்துள்ளார். மேலும், இவர் மீரட் பார் அசோசியேஷனில் உறுப்பினராகவும் இருந்து வந்துள்ளார். இவர் நேற்று அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டது உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கூறியதாவது:-
மீரட் பார் அசோசியேஷன் தலைவர் மங்கே ராம் தெரிவித்ததாவது:-

நேற்று இரவு 10.40 மணியளவில் அவர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை வழிமறித்துள்ளனர். வழிமறைத்த அவர்கள் முகேஷ் ஷர்மாவை நோக்கி மூன்று முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். துப்பாக்கியால் சுட்டதில் குண்டடிப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலையாளிகளை விரைவில் கண்டுபிடிக்க 4 போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கொலைக்குப் பின்னால் உள்ள நோக்கம் கண்டறியப்படவில்லை என்றாலும், தனிப்பட்ட பகைக்காக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிப்பதாக கூறப்படுகிறது.
மீரட் பார் அசோசியேஷன் தலைவர் மங்கே ராம் தெரிவித்ததாவது:-
முகேஷ் ஷர்மா கொலை செய்யப்பட்டதற்கு நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். கொலையாளிகளை போலீசார் விரைவில் கண்டுபிடிக்கும் வரை நாங்கள் வரும் திங்கள் கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.