அயோத்தி வழக்கில் இந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு அமையும் - ஆர்.எஸ்.எஸ். நம்பிக்கை
அயோத்தி வழக்கில் இந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு அமையும் என ஆர்.எஸ்.எஸ். நம்பிக்கை தெரிவித்துள்ளது.;
புவனேஸ்வர்,
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அனைத்திந்திய நிர்வாகக்குழு கூட்டம் கடந்த 3 நாட்களாக புவனேஸ்வரில் நடந்தது. இதன் நிறைவு நிகழ்ச்சிக்குப்பின் நேற்று ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அயோத்தி வழக்கின் தீர்ப்பை ஏற்பீர்களா? என அவரிடம் கேட்கப்பட்டது.
இதற்கு அவர் பதிலளிக்கையில், ‘சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு இந்துக்களுக்கு சாதகமாக வரும் என நாங்கள் நம்புகிறோம்’ என்று கூறினார்.
தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான கணக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவித்த பையாஜி ஜோஷி, இதை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்பட உயர்மட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.