தேசிய குடியுரிமை பதிவேடு ஒருங்கிணைப்பாளர் அதிரடி மாற்றம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
அசாமில் பணியாற்றி வந்த தேசிய குடியுரிமை பதிவேடு ஒருங்கிணைப்பாளரை அதிரடி மாற்றம் செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
புதுடெல்லி,
அசாம் மாநிலத்தில் என்.ஆர்.சி. என்று அழைக்கப்படுகிற தேசிய குடியுரிமை பதிவேடு கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி வெளியிடப்பட்டது.
இந்த பதிவேட்டில் 19 லட்சத்து 6 ஆயிரத்து 657 பேர் பெயர்கள் விடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த பதிவேட்டில் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் அதிருப்தி தெரிவித்தனர்.
இது தொடர்பான ஒரு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அசாமில் தேசிய குடியுரிமை பதிவேடு ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்த பிரதீக் ஹஜேலாவை மத்திய பிரதேசத்துக்கு அனுப்புமாறு மத்திய அரசுக்கும், அசாம் மாநில அரசுக்கும் சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது. முன்னதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிடம் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், ‘‘இந்த இட மாற்றத்துக்கு காரணம் ஏதாவது உண்டா?’’ என கேள்வி எழுப்பினார். அதற்கு தலைமை நீதிபதி, ‘‘காரணம் இன்றி இடமாற்றம் இருக்குமா?’’ என திருப்பிக்கேட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை அடுத்த மாதம் 26-ந் தேதி நடைபெறும் என சுப்ரீம் கோர்ட்டு கூறியது.