பாகிஸ்தான் 2 போர் விமானங்களை அனுப்பி இந்திய பயணிகள் விமானத்தை வழிமறிக்க முயன்றது அம்பலம்

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்த பின்னர் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஒரு பதற்றநிலை உருவானது. அந்த சூழ்நிலையில் செப்டம்பர் 23-ந் தேதி டெல்லியில் இருந்து காபூலுக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் 120 பயணிகளுடன் பாகிஸ்தான் வழியாக சென்றது.

Update: 2019-10-17 23:17 GMT
புதுடெல்லி, 

 பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்ததும் அந்த விமானத்தை வானிலேயே இடைமறிக்க பாகிஸ்தான் 2 எப்-16 போர் விமானங்களை அனுப்பியது.

அப்போது பாகிஸ்தான் போர் விமானிகள் இந்திய விமானியிடம் தாழ்வாக பறக்கும்படியும், விமான விவரங்களை தெரிவிக்கும்படியும் கூறினார்கள். அவர்கள் அது இந்திய போர் விமானம் என்று கருதியதாக தெரிகிறது. ஆனால் பயணிகள் விமானம் என்று தெரிந்ததும் அந்த 2 பாகிஸ்தான் போர் விமானங்களும் ஆப்கானிஸ்தான் எல்லை வரை இந்திய பயணிகள் விமானத்துக்கு பாதுகாப்பாக சென்றன. இந்த தகவலை மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்