370-வது பிரிவை ரத்து செய்ததால் காஷ்மீர், வளர்ச்சி பாதையில் செல்கிறது - பிரதமர் மோடி பேச்சு
370-வது பிரிவை ரத்து செய்ததால் காஷ்மீர் மாநிலம் வளர்ச்சிப்பாதையில் செல்வதாக அரியானா மாநில தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி கூறினார்.
சண்டிகார்,
அரியானா சட்டசபை தேர்தல், 21-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி, அந்த மாநிலத்தில் பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள பல்லப்கார் என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
இந்தியா இப்போது பெரிய முடிவுகளை எடுத்து வருகிறது. முன்பெல்லாம் இதுபோன்ற முடிவுகளை நினைத்துக்கூட பார்க்க முடியாது. நான் எந்த முடிவை சொல்கிறேன் என்று உங்களுக்கு தெரியும். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவை நீக்கியதை பற்றித்தான் சொல்கிறேன்.
இப்போது காஷ்மீரும், லடாக்கும் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கின்றன. இதற்கான பெருமை, மோடியை சேராது. நாட்டின் 130 கோடி மக்களையே சேரும். இத்தகைய முடிவுகளை எடுக்க நீங்கள் அளித்த தீர்ப்புதான் எனக்கு வலிமையை கொடுக்கிறது. உங்களிடமிருந்தே நான் வலிமையை பெறுகிறேன்.
ஆனால், எதிர்க்கட்சிகள் 370-வது பிரிவு நீக்கத்தை அரசியல் ஆக்கி வருகின்றன. 370-வது பிரிவு உங்களுக்கு மிகவும் பிடித்திருந்தால், மக்களிடம் சென்று, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வருவோம் என்று சொல்ல தயாரா என்று நான் சவால் விடுக்கிறேன்.
இந்த மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்கும் முயற்சி தகர்ந்து விட்டது. ஆனால், பா.ஜனதா வலிமையான அணியாக திகழ்கிறது. வலிமையான கேப்டனாக முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் இருக்கிறார். இவ்வாறு மோடி பேசினார்.