பயங்கரவாத வழக்குகளை சாதாரண குற்றவியல் வழக்குகள் போல் நீதித்துறை அணுகுகிறது - தேசிய பாதுகாப்பு ஆலோசகர் வேதனை

பயங்கரவாத வழக்குகளை சாதாரண குற்றவியல் வழக்குகள் போல் நீதித்துறை அணுகுவதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் வேதனை தெரிவித்துள்ளார்.

Update: 2019-10-14 20:45 GMT
புதுடெல்லி,

பயங்கரவாத தடுப்பு படைகளின் தலைவர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்றார். அவர் பேசியதாவது:-

பயங்கரவாதிகளுக்கு உயர் தொழில்நுட்பம் எளிதாக கிடைக்கிறது. இதனால் அவர்களுக்கு எதிராக ஆதாரம் திரட்டுவது கடினமாகவும், சிக்கலாகவும் இருக்கிறது. மேலும், சாதாரண குற்றவியல் வழக்குகளைப் போலவே பயங்கரவாத வழக்குகளை நீதித்துறை அணுகுகிறது.

இரு வழக்குகளுக்கும் ஒரேவிதமான அளவுகோல்களை கையாள்கிறது. நேரில் கண்ட சாட்சிகளை கேட்கிறது. இவ்வழக்குகளுக்கு நேரில் கண்ட சாட்சிகள் குறைவாகவே இருக்கும். சாதாரண மனிதர்கள், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளுக்கு எதிராக சாட்சி சொல்ல வருவார்களா? இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்