‘வருகிற 17-ந்தேதிக்குள் நேரில் ஆஜராக வேண்டும்’ - டி.கே.சிவக்குமாரின் மனைவி- தாயாருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

வருகிற 17-ந்தேதிக்குள் நேரில் ஆஜராக வேண்டும் என டி.கே.சிவக்குமாரின் மனைவி மற்றும் தாயாருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Update: 2019-10-14 20:22 GMT
பெங்களூரு,

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான டி.கே.சிவக்குமார் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பிறகு அவர் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் கைது செய்யப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது.

இந்தநிலையில் டி.கே.சிவக்குமாரின் மனைவி மற்றும் தாயாருக்கு தற்போது அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வருகிற 17-ந்தேதிக்குள் நேரில் ஆஜராக வேண்டும் என்று அதில் அமலாக்கத்துறை கூறியுள்ளது. இதன் காரணமாக டி.கே.சிவக்குமாருக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்