கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி அரசியலில் இருந்து ஓய்வு?
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி அரசியலில் இருந்து தான் ஓய்வுபெறுவது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி அரசியலில் இருந்து ஓய்வுபெறுவது குறித்து ஆலோசித்து வருவதாக கூறினார். நேற்று ஒரு கோவில் விழாவில் பேசுகையில் இந்த தகவலை அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் “நான் ஆட்சி அதிகாரத்தில் ஒட்டிகொண்டிருந்தவன் கிடையாது. அதிகார ஆசையும் எனக்கு இல்லை. யாரையும் நம்ப முடியாத அளவுக்கு அரசியல் மோசமான நிலைக்கு சென்றுவிட்டது. இதனால் எனக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.