பொருளாதாரத்தை திரைப்பட வசூலுடன் ஒப்பீடு: ரவிசங்கர் பிரசாத் தனது கருத்தை வாபஸ் பெற்றார்
பொருளாதாரத்தை திரைப்பட வசூலுடன் ஒப்பிட்டு பேசிய தனது கருத்து சர்ச்சையை கிளப்பியதை தொடர்ந்து, மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் அந்த கருத்தை நேற்று வாபஸ் பெற்றார்.;
புதுடெல்லி,
மராட்டிய மாநில தேர்தல் பிரசாரத்துக்காக நேற்று முன்தினம் மும்பை சென்ற மத்திய தகவல் தொழில்நுட்ப மந்திரி ரவிசங்கர் பிரசாத், அங்கே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நாட்டின் பொருளாதார மந்தநிலை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, நாட்டில் பொருளாதார மந்தநிலை இல்லை என மறுத்த அவர், அப்படி இருந்திருந்தால் கடந்த 2-ந்தேதி வெளியான 3 இந்தி திரைப்படங்கள் ஒரே நாளில் ரூ.120 கோடி வசூலிக்க முடியுமா? என கேள்வியும் எழுப்பினார்.
மத்திய மந்திரியின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பொருளாதார மந்தநிலையை நிதி மந்திரியே ஒப்புக்கொண்ட பின்னரும், ரவிசங்கர் பிரசாத் பொருளாதார மந்தநிலையை மறுத்திருப்பது கண்டனத்துக்குரியது என சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பரிமாறப்பட்டன.
இவ்வாறு தனது கருத்துகளுக்கு எதிர்ப்பும், சர்ச்சையும் கிளம்பியதை தொடர்ந்து, நேற்று அவர் தனது கருத்துகளை வாபஸ் பெற்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:-
ஒரே நாளில் 3 திரைப்படங்கள் ரூ.120 கோடி வசூல் குவித்ததாக நேற்று (நேற்று முன்தினம்) மும்பையில் நான் கூறிய கருத்துகள், உண்மையில் சரியானதுதான். இந்தியாவின் திரைப்பட தலைநகரான மும்பையில் நான் இதை தெரிவித்தேன். நமது திரைத்துறை லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து, வரி வருவாயிலும் முக்கிய பங்காற்றுவது பெருமை அளிக்கிறது.
அந்த பேட்டியில், நாட்டின் பொருளாதாரத்தை வலுவாக்கும் வகையில் அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பாகவும் நான் விரிவாக எடுத்துரைத்தேன். பொதுமக்களின் நலன்களில் பிரதமர் மோடி அரசு எப்போதும் கவனம் செலுத்துகிறது.
அந்த பேட்டியின் மொத்த வீடியோவும் எனது சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு உள்ளது. ஆனால் எனது பேட்டியின் ஒரு பகுதியை முற்றிலும் திரித்து வெளியிட்டு உள்ளனர். எனினும் முக்கியமான ஒரு நபர் என்ற முறையில் நான் எனது கருத்துகளை வாபஸ் பெறுகிறேன். இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.