தெலுங்கானா பஸ் ஸ்டிரைக் 2-வது நாளாக நீடிப்பு
தெலுங்கானா பஸ் ஸ்டிரைக் 2-வது நாளாக நீடித்தது.;
ஐதராபாத்,
தெலுங்கானா மாநில சாலை போக்குவரத்து கழகத்தை அரசுடன் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அதன் தொழிலாளர்கள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர். நேற்று 2-வது நாளாக வேலைநிறுத்தம் நீடித்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தற்காலிக ஊழியர்களை கொண்டு பஸ்கள் இயக்கப்பட்டன. இருப்பினும், பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படாததால், பண்டிகை காலத்தில் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு இருந்தவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே, வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர தொழிற்சங்கங்களுக்கு உத்தரவிடக்கோரும் பொதுநல மனுவை தெலுங்கானா ஐகோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.