ரூ.8 கோடி செம்மரக்கட்டை கடத்தல்; தமிழகத்தை சேர்ந்த 3 பேர் கைது

ரூ.8 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டை கடத்தல் தொடர்பாக, தமிழகத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2019-10-06 20:05 GMT
போபால்,

மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டம் கால்காட் என்ற இடத்தில் உள்ள சுங்க சாவடியில் கடந்த மாதம் 15 ஆயிரத்து 500 கிலோ எடையுள்ள செம்மரக்கட்டைகளை வனத்துறையின் சிறப்பு அதிரடிப்படை கைப்பற்றியது. அவற்றை கடத்தி வந்த தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த தகவலின்பேரில், தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிடிபட்ட செம்மரக்கட்டைகளின் மொத்த மதிப்பு ரூ.8 கோடி ஆகும். திருமலையை சுற்றியுள்ள காட்டில் செம்மரத்தை வெட்டியதாக 3 பேரும் ஒப்புக்கொண்டனர். சென்னையில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத்துக்கு கடத்தப்பட்டபோது இவை பிடிபட்டுள்ளன.

மேலும் செய்திகள்