ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தங்கத்தேரில் எழுந்தருளி பவனி

ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தங்கத்தேரில் எழுந்தருளி பவனி வந்தனர்.;

Update: 2019-10-05 20:37 GMT
திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று காலை அனுமந்த வீதிஉலா, மதியம் உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம், மாலை தங்கத்தேரோட்டம் நடந்தது.

அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தங்க, வைர அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மாடவீதிகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

அதைத்தொடர்ந்து மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை ஊஞ்சல் சேவை நடந்தது. இதையடுத்து உற்சவர் மலையப்பசாமி வாகன மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, யானை வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் மலையப்பசாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்