“காந்தியின் பாதையில் நடைபோடுவது காங்கிரஸ் கட்சி மட்டும்தான்” - சோனியா பெருமிதம்
காந்தியின் பாதையில் நடைபோடுவது காங்கிரஸ் கட்சி மட்டும்தான் என்று சோனியா காந்தி பெருமிதத்துடன் கூறினார்.
புதுடெல்லி,
தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்த நாள் நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி டெல்லி தீனதயாள் உபாத்யாய் மார்க்கில் அமைந்துள்ள மாநில காங்கிரஸ் தலைமையகத்தில் இருந்து ராஜ்காட் வரை, 3 கி.மீ. தொலைவுக்கு ராகுல் காந்தி, ‘சந்தேஷ் யாத்ரா’ என்ற பெயரில் பாதயாத்திரை நடத்தினார். இதில் திரளானோர் பங்கேற்றனர். இளைஞர்கள் பலரும் காந்தி வேடத்தில் சென்றனர்.
காந்தி நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் தேசப்பிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ராகுலுடன் பாத யாத்திரையாக வந்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு காந்தியின் கொள்கைகள் குறித்த உறுதிமொழியை சோனியா காந்தி செய்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் இந்தியில் பேசினார். அப்போது அவர் பாரதீய ஜனதா கட்சியையும், அதன் தலைமையையும் பெயர் குறிப்பிடாமல் சாடினார். அப்போது அவர் கூறும்போது, “தங்களை உயர்ந்தவர்கள் என்று கருதுகிறவர்கள், மகாத்மா காந்தியின் தியாகங்களை எவ்வாறு புரிந்து கொள்வார்கள்? பொய்மை அரசியல் செய்பவர்கள், மகாத்மா காந்தியின் அகிம்சை தத்துவத்தை புரிந்து கொள்ள மாட்டார்கள்” என்று கூறினார்.
மேலும் அவர் கூறும்போது, “மற்றவர்கள் என்ன கூறினாலும், காங்கிரஸ் கட்சி மட்டும்தான் மகாத்மா காந்தியின் பாதையில் நடைபோட்டு வேலை வாய்ப்பை, கல்வியை, விவசாயிகளுக்கு தேவையானவற்றை, வழங்கி உள்ளது. இது ஈடு இணையற்றது” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசும்போது, “இந்தியாவும், காந்தியும் ஒன்றுதான். ஆனாலும் இன்னும் சிலர் ஆர்.எஸ்.எஸ்.சும் இந்தியாவும் ஒன்றுதான் என்று கூற விரும்புகிறார்கள். நாடு இந்த அளவுக்கு முன்னேற்றம் கண்டு இருப்பதற்கு காரணம், மகாத்மா காந்திதான்” என்றார்.
இந்த நாளையொட்டி ராகுல் காந்தி டுவிட்டரில் மகாத்மா காந்திக்கு புகழாரம் சூட்டி ஒரு பதிவு வெளியிட்டார்.
அந்தப் பதிவில் அவர், “தேசப்பிதாவின் பிறந்த நாளில், அவருக்கு என் மரியாதையை செலுத்துகிறேன். அவர் தனது வார்த்தைகளினால் மட்டுமின்றி தனது செயல்களினாலும், அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும்; அடக்குமுறை, மத சகிப்பின்மை, வெறுப்பு ஆகியவற்றை வீழ்த்துவதற்கு அன்பும், அகிம்சையும்தான் ஒரே வழி என காட்டியவர்” என கூறி உள்ளார்.