காந்திய வழியை பின்பற்றுங்கள், பிறகு அவரைப் பற்றி பேசலாம்: பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

மகாத்மா காந்தி காட்டிய உண்மை வழியில் பாஜக முதலில் நடக்கட்டும் பிறகு அவரைப் பற்றி பேசலாம் என்று பிரியங்கா காந்தி விமர்சித்தார்.

Update: 2019-10-02 14:26 GMT
புதுடெல்லி,

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு உத்தர பிரதேசத்தில் பாத யாத்திரை நடைபெற்றது.  3 கி.மீட்டர் தூரம் நடைபெற்ற இந்த பாத யாத்திரையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களின் ஒருவரான பிரியங்கா காந்தி கலந்து கொண்டார். 

முன்னதாக  பிரியங்கா காந்தி பேசியதாவது:- “  உண்மை வழியை பின்பற்ற வேண்டும் என்பது மகாத்மா காந்தியின் உத்தரவாகும். முதலில் மகாத்மா காந்தி உலகிற்குக் காட்டிய உண்மை வழியை  பாஜகவினர்  பின்பற்றட்டும். அதன்பின் மகாத்மா காந்தி குறித்து அவர்கள் பேசட்டும்.

பெண்களுக்கு எதிராக அட்டூழியங்கள், கொடுமைகள் நடக்கின்றன. அந்தக் குற்றங்களைச் செய்தவர்களை எதிர்த்துக் குரல் கொடுத்துப் போராடினால், போராட்டம் நடத்துபவர்கள் நெருக்கடிக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இதற்கு எதிராக நாங்கள் நிச்சயம் போராடுவோம்" என்றார்.

மேலும் செய்திகள்