19 மாதங்களில் இல்லாத அளவுக்கு செப்டம்பரில் ஜி.எஸ்.டி. வருவாய் குறைவு
19 மாதங்களில் இல்லாத அளவுக்கு செப்டம்பரில் ஜி.எஸ்.டி வருவாய் குறைந்துள்ளது.;
புதுடெல்லி,
பல வரிகளுக்கு மாற்றாக ஒரே வரி என்ற தாரக மந்திரத்துடன் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 1 ஆம் தேதி, ஒருங்கிணைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரிமுறை நாட்டில் அமல்படுத்தப்பட்டது. சரக்கு மற்றும் சேவை வரி என்று அழைக்கப்படும் இந்த வரி வருவாய் ஆனது, கடந்த செப்டம்பரில் 19 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது.
செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசுக்கு ஜி.எஸ்.டி. மூலமாக ரூ. 91,916 கோடி வருமானம் கிடைத்துள்ளது. அதற்கு முந்தைய மாத வருவாய் ரூ. 98,202 கோடியாக இருந்தது கவனிக்கத்தக்கது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தின்போது மத்திய அரசுக்கு ரூ. 94,442 கோடி வருமானம் கிடைத்தது. நடப்பாண்டில் வருமானம் ரூ. 2.67 சதவீதம் குறைந்திருக்கிறது.