32 கோடி பக்கங்களுடன் உலகிலேயே மிகப்பெரிய இணையதளம்

32 கோடி பக்கங்களுடன் உலகிலேயே மிகப்பெரிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Update: 2019-09-17 19:51 GMT
புதுடெல்லி,

டெல்லியை சேர்ந்தவர் அமித் சர்மா. இவர் Cheapflightsall.com என்ற இணையதளத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த இணையதளத்தை உலகிலேயே மிகப்பெரிய அளவில் 32 கோடி பக்கங்களுடன் 23 நாட்களில் உருவாக்கி உலக சாதனை படைத்து உள்ளார்.

32 கோடி பக்கங்கள் உடைய இந்த இணையதளம் 5 டி.பி.க்கு சமமாகும். (1 டி.பி.=1000 ஜி.பி.) இந்த இணையதள முகவரியை விமான போக்குவரத்து வசதிகள் உள்ள 159 நாடுகளில் தொடர்புகொள்ள முடியும். ஏற்கனவே அமித் சர்மா, 6 முறை உலக சாதனை புரிந்தவர்.

மேலும் செய்திகள்