கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து : பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு

ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2019-09-17 14:38 GMT
விசாகப்பட்டினம்,

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் சுற்றுலா போக்குவரத்து நடப்பது வழக்கம். தேவிப்பட்டினம் அருகே உள்ள கோவிலை பார்த்த மக்கள், படகு மூலம் பப்பிகொண்டலு சுற்றுலா தலத்துக்கு செல்ல விரும்பினர்.

இதற்காக ஆந்திர மாநில சுற்றுலா வளர்ச்சி கழக படகில் ஊழியர்கள் உட்பட 62 பேர் ஏறினர். கச்சுலுரு என்ற இடத்திற்கு அருகே சென்ற படகு திடீரென கவிழ்ந்தது. உயிர் காக்கும் உடை அணியாத பலரும் தண்ணீரில் மூழ்கினர்.

எனினும், 17 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். விபத்து நடந்த அன்று 13 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. தண்ணீரில் மாயமான மற்ற 32 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று மேலும் 12 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது.

மேலும் செய்திகள்