மராட்டிய சட்டசபை தேர்தல்: காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலா 125 தொகுதிகளில் போட்டி
மராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா 125 தொகுதிகளில் போட்டியிடும் என்று சரத்பவார் தெரிவித்து உள்ளார்.
மும்பை,
288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்கான தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது வேண்டுமானலும் வெளியாக உள்ளது.
இந்த தேர்தலில் ஆளும் கட்சிகளான பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிடுவதாக அறிவித்து உள்ளன. எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரசும் கூட்டணி வைத்து போட்டியிடுகின்றன.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சமீபத்தில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேசினார்.
இந்தநிலையில் காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் சம எண்ணிக்கையிலான தொகுதிகளில் போட்டியிடும் என்று நேற்று சரத்பவார் அறிவித்தார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சட்டசபை தேர்தலில் காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் தலா 125 தொகுதிகளில் போட்டியிடும். எஞ்சிய 38 தொகுதிகள் கூட்டணியில் சேரும் மற்ற கட்சிகளுக்கு ஒதுக்கப்படுகிறது. தேசியவாத காங்கிரசில் இந்த தடவை புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
கடந்த (2014) சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தனித்து போட்டியிட்டன. இதில் காங்கிரஸ் 42 தொகுதிளிலும், தேசியவாத காங்கிரஸ் 41 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. ஆனால் இந்த தேர்தலில் 15 ஆண்டுகாலம் தொடர்ந்து கூட்டணி அரசை நடத்தி வந்த இந்த கட்சிகள் பா.ஜனதா, சிவசேனாவிடம் ஆட்சியை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேசியவாத காங்கிரசை சேர்ந்த தலைவர்கள் பலர் கட்சியில் இருந்து விலகி ஆளும் பா.ஜனதா, சிவசேனாவில் இணைந்து வருகிறார்கள். குறிப்பாக மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி வழித்தோன்றலான உதயன்ராஜே போஸ்லே தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்து விட்டு கடந்த சனிக்கிழமை அமித்ஷா முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்தார். தேசியவாத காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் பாஸ்கர் ஜாதவ், கட்சியின் மும்பை பிரிவு தலைவர் சச்சின் அஹிர், முன்னாள் மந்திரிகள் ஜெய்தத் சிர்சாகர், கணேஷ் நாயக் உள்ளிட்டோரும் சமீபத்தில் கட்சி தாவினார்கள்.
இதுகுறித்து கருத்து கூறிய சரத்பவார், தனது கட்சியை விட்டு ஆளும் கட்சிகளுக்கு சென்றவர்கள் தன்னம்பிக்கை இழந்த கோழைகள் என்றும், மராட்டிய மக்கள் அவர்களுக்கு தேர்தலின் போது தக்க பாடம் கற்பிப்பார்கள் என்றும் கடுமையாக விமர்சித்தார்.