‘மைசூர்பாகு’ பற்றிய ‘டுவிட்டர்’ பதிவால் சர்ச்சை - கர்நாடக அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு
புவிசார்குறியீடு தமிழகத்துக்கு கிடைத்ததா என ‘மைசூர்பாகு’ பற்றிய ‘டுவிட்டர்’ பதிவுக்கு கர்நாடக அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பெங்களூரு,
புகழ்பெற்ற இனிப்பு வகைகளில் ‘மைசூர்பாகு’ ஒன்று. எழுத்தாளர் ஆனந்த் ரங்கநாதன் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுடன் ‘மைசூர்பாகு’ பகிர்ந்து கொள்ளும் படம் ஒன்றை பதிவிட்டு, ‘மைசூர்பாகு’வின் புவிசார் குறியீட்டை தமிழகத்துக்கு வழங்கிய ஒருநபர் கமிட்டி சார்பாக இதை மகிழ்ச்சியாக பெற்றுக்கொள்கிறேன்‘ என்று வேடிக்கையாக குறிப்பிட்டு இருந்தார்.
இந்த பதிவு வைரலாக பரவ தொடங்கியதோடு, சர்ச்சைக்கும் இடம் அளித்தது. கர்நாடக செய்தி சேனல்களில் ‘மைசூர்பாகு’ கர்நாடகத்தின் தயாரிப்பு. எப்படி தமிழகத்துக்கு புவிசார் குறியீட்டை வழங்கலாம் என்ற கேள்விகளுடன் செய்திகள் வெளியாகின. சில சேனல்களில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். தற்போதைய நடவடிக்கை அவருடைய இரட்டை முகத்தை காட்டுகிறது என்றும் செய்திகளை வெளியிட்டன. இதுபற்றி காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இதற்கிடையே, தனது ‘டுவிட்டர்’ பதிவு சர்ச்சை உருவாக்குவதை அறிந்த ஆனந்த் ரங்கநாதன், பெங்களூரு பா.ஜனதா எம்.பி. தேஜஸ்வி சூர்யா மூலமாக சம்பந்தப்பட்ட செய்தி சேனலுடன் பேசி செய்தியை நிறுத்திவிட்டார். இருப்பினும் ‘மைசூர்பாகு’ தொடர்பாக பல்வேறு தரப்பினர் தொடர்ந்து ‘டுவிட்டரில்’ பதிவு செய்தனர். இதனால் ‘மைசூர்பாகு’ என்ற ‘ஹேஷ்டேக்’ இந்திய அளவில் ‘டிரெண்டிங்கில்‘ இருந்தது குறிப்பிடத்தக்கது.