படகுகள் மோதி விபத்து: பலியானவர்கள் குடும்பங்களுக்கு ரூ. 4 லட்சம் இழப்பீடு

விநாயகர் சிலைகளை கரைக்கும் போது படகுகள் மோதியதில் நடந்த விபத்தில் 11 பேர் பலியான சம்பவத்தில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறது.

Update: 2019-09-13 05:43 GMT
போபால்,

போபாலின் மேல் ஏரியில்  விநாயகர் சிலைகள் கரைக்கும்  நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது இரண்டு படகுகள் மோதியதில் 11 பேர் நீரில் மூழ்கினர்.  இதில்  6 பேர்  உடல்கள் மீட்கப்பட்டதாக கலெக்டர் தருண் குமார் பித்தோடு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும் போது, முதலாவதாக படகுகளில் ஒன்று கட்லாபுரா காட் அருகே கவிழ்ந்தது, அங்கிருந்து சிலைகள் மூழ்கியுள்ளன. 

இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக நகரின் ஹமீடியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.  இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறது. உடனடி நிவாரணமாக ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும் என கூறினார்.

மாநில சட்ட விவகார அமைச்சர் பி.சி. சர்மா, "சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்" என கூறினார்.

மேலும் செய்திகள்