கால்நடைகளுக்கான நோய் தடுப்பு திட்டம் : மதுராவில் தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி

கால்நடைகளுக்கான நோய் தடுப்பு திட்டத்தை மதுராவில் பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்.

Update: 2019-09-11 08:02 GMT
மதுரா, 

உத்தரபிரதேசத்தில் உள்ள மதுராவிற்கு இன்று காலை பிரதமர் மோடி சென்றார். மதுரா சென்ற மோடியை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார்.

மதுராவில் பிரதமர் மோடி,  பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்தார்.  கால்நடைகளுக்கான நோய் தடுப்பு திட்டத்தையும் பிரதமர் மோடி மதுராவில் துவங்கி வைத்தார். தொடர்ந்து அங்கு இருந்த பசு மற்றும் கன்றுக்குட்டியை தடவிக்கொடுத்தார்.

செயற்கை கருவூட்டல் திட்டத்தையும் பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான பிரச்சாரத்தையும் பிரதமர் மோடி துவங்கி வைத்தார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, வரும் அக்டோபர் 2 ஆம் தேதிக்குள் ஒருமுறை பயன்படும் பிளாஸ்டிக் பொருட்களை நமது வீடுகள், பணிபுரியும் இடங்களில் இருந்து அகற்ற முயற்சி எடுக்க வேண்டும். ஒருமுறை பயன்படும் பிளாஸ்டிக்கை அகற்ற சுயஉதவி குழுக்கள் உள்ளிட்டோர் உதவ வேண்டும் நான் கோரிக்கை விடுக்கிறேன்”என்றார்.

மேலும் செய்திகள்