உயிருக்கு போராடும் 5 சிறுவர்களுக்கு ஒருநாள் போலீஸ் கமிஷனர் பதவி
உயிருக்கு போராடும் 5 சிறுவர்களுக்கு ஒருநாள் போலீஸ் கமிஷனர் பதவி வழங்கப்பட்டது.
பெங்களூரு,
சென்னை உள்ளிட்ட நாட்டின் முக்கிய பெருநகரங்களில் ‘மேக் எ விஷ்’ என்ற தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நிறைவேற முடியாத ஆசையுடன் வாழும் பாமர மக்களின் கனவுகளை ஓரளவுக்காவது நிறைவேற்றி வைப்பது இந்த தொண்டு நிறுவனத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
அவ்வகையில், கொடிய நோய்களுக்குள்ளாகி ஆயுள் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் 5 சிறுவர்களுக்கு பெங்களூரு நகரில் ஒருநாள் மட்டும் போலீஸ் கமிஷனராக பதவியேற்க இந்த தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்தது.
இதைத்தொடர்ந்து, கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு நகரில் உள்ள போலீஸ் தலைமை அலுவலகத்தில் போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ், ழுழு சீருடையுடன் அவர்கள் 5 பேரையும் ஒருநாள் கமிஷனராக தனது நாற்காலியில் அமர வைத்து அழகு பார்த்தார்.
மிக சிறிய வயது குழந்தைகளான இவர்கள் அனைவருமே மிக தீவிரமான நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களின் பெற்றோரை ஒரு நாளாவது மகிழ்விக்க வேண்டும் என விரும்பினேன் என்று நெகிழ்ச்சியுடன் பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ் கூறினார்.