பீகாரில் போலீசாரை தாக்கிய கிராம மக்கள்: பணையக் கைதிகளாக பிடித்து சென்று தாக்கிய கொடூரம்

பீகாரில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்ததில் சந்தேகமடைந்த கிராமத்தினர் போலீசாரை பணையக்கைதிகளாக பிடித்து வைத்து தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

Update: 2019-09-08 13:30 GMT
பாட்னா,

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த  இரண்டு சிறுவர்கள் காணாமல் போனார்கள். அவர்களை 2 நாட்களாக காணவில்லை என்ற உறவினர்கள் தேடி வந்தனர். 

இந்நிலையில் அவர்களின் உடல் நேற்று சாக்கடையில் கண்டெடுக்கப்பட்டது. சிறுவர்கள் மர்மநபர்களால் தாக்கப்பட்டு இறந்திருக்கலாம் என அந்த கிராம மக்கள் சந்தேகம் அடைந்தனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்யாமல் சாக்கடையில் சிறுவர்கள் மூழ்கி இறந்தாக போலீசார் தெரிவித்தனர். 

இதனால் ஆத்திரமடைந்த அந்த கிராம மக்கள் அவுராய் காவல் நிலையத்தின் முன்பு கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சில போலீசாரை பணையக்கைதிகளாக பிடித்து சென்று சரமாறியாக தாக்கினர். மேலும் ஆபாச வார்த்தைகளிலும் திட்டியதாக கூறப்படுகிறது. 

கிராம மக்கள் தாக்கியதில் காயமடைந்த போலீசார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதனை சிலர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த உயர் அதிகாரிகள் கூட்டத்தை கலைக்க வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அங்கு கூடுதல் படை குவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்