தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக பதவியேற்பு

தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக ஐதராபாத் ராஜ்பவனில் பதவியேற்றார்.;

Update: 2019-09-08 06:51 GMT
ஐதராபாத்,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஐந்து மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி அறிவித்தார். தமிழ்நாடு பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக அறிவிக்கப்பட்டார்.

இதன் படி, இன்று காலை 11 மணிக்கு ஹைதராபாத் ராஜ்பவனில் தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்றார்.

இந்த பதவியேற்பு விழாவில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அம்மாநில அமைச்சர்கள் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்