உற்சவர் வீதி உலாவின் போது குடை உடைந்து விழுந்ததால் பரபரப்பு

உற்சவர் வீதி உலாவின் போது குடை உடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-09-07 21:45 GMT
சித்தூர்,

ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் காணிப்பாக்கம் உள்ளது. அங்கு, பிரசித்தி பெற்ற வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 5-ம் நாளான நேற்று காலையில் கிளி வாகனத்தில் உற்சவர் விநாயகர் வீதி உலா வந்தார். அப்போது உற்சவருக்கு மேலே இருக்கும் 2 குடைகளில் ஒன்று திடீரென்று உடைந்து விழுந்தது. இதனால் ஊர்வலம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சாமி ஊர்வலத்தின் போது குடை உடைந்து விழுந்ததை பக்தர்கள் அபசகுணமாக கருதுகின்றனர்.

மேலும் செய்திகள்