சந்திரயான்-2 தோல்வி: ககன்யான் திட்டத்தை பாதிக்காது
சந்திரயான்-2 தோல்வியடைந்த சம்பவம், ககன்யான் திட்டத்தை பாதிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இஸ்ரோவின் முன்னாள் அறிவியல் துறை செயலாளரும், பெங்களூரு இஸ்ரோ நிறுவன பூமி கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை திட்ட இயக்குனருமான பி.ஜி.திவாகர் கூறும் போது, சந்திரயான்-2 இஸ்ரோவின் எதிர்கால திட்டங்களில் நிச்சயமாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. முக்கியமாக கனவுத்திட்டமான 2022-ம் ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் போன்றவை எந்த பிரச்சினையும் இன்றி வெற்றிகரமாக நிறைவேற்றப்படும். ஒவ்வொரு திட்டமும் வெவ்வேறானவை என்றார்.