மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சருடன் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சந்திப்பு

மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சந்தித்து கூடுதலாக மண்ணெண்ணெய் வழங்க வலியுறுத்தினார்.

Update: 2019-09-03 06:24 GMT
புதுடெல்லி,

தமிழகத்துக்கு மத்திய அரசு வழக்கமாக கொடுக்கும் மண்ணெண்ணெய் அளவீட்டில் இருந்து 24 சதவீதம் குறைத்து உள்ளது. 

இந்த நிலையில்  தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை இன்று டெல்லியில்
சந்தித்தார்.

அப்போது தமிழகத்துக்கு கூடுதலாக மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 


மேலும் செய்திகள்