பொருளாதார மந்தநிலை இருப்பதாக கூறுவது தவறு : பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி

பொருளாதார மந்தநிலை இருப்பதாக கூறுவது தவறு என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்தார்.;

Update: 2019-09-02 10:27 GMT
நெல்லை, 

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி நெல்லையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சி காலத்திலும் பொருளாதார பிரச்சினை இருந்தது.  வெளிநாடுகளில் இருப்பது போன்ற நீர் மேலாண்மையை ஏற்படுத்த வேண்டும். பல ஆண்டுகளாக இது பற்றி நான் பேசியும், எழுதியும் வருகிறேன். 

நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் இருந்தது போன்ற மாற்றத்தை கொண்டு வரவேண்டும்.  விவசாயிகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும்.  நமது கொள்கையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் பெரிய அளவில் வேலைஇல்லா திண்டாட்டம் ஏற்படும்.  ப.சிதம்பரத்தின் மீது 7-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. காங்கிரஸின் செயற்குழு கூட்டத்தை திகார் சிறையில் வைத்துக் கொள்ளலாம்” என்றார். 

மேலும் செய்திகள்