விநாயகர் சதுர்த்தி: ஜனாதிபதி வாழ்த்து
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள சக இந்தியர்களுக்கு எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கற்றல், ஞானம், வளமை ஆகியவற்றின் அடையாளமாக திகழும் விநாயகரின் பிறப்பை குறிப்பதே இந்த பண்டிகை.
தேசிய மேம்பாட்டையும், அனைவருக்குமான நலன்களையும் எட்டுவதற்கு நாம் மனதில் கொள்ள வேண்டிய பண்புகளையும், இலக்குகளையும் இவை தெரிவிக்கின்றன. இந்த பண்டிகையை பாரம்பரிய உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடுவோம்” என்று கூறியுள்ளார்.