இந்தியா எந்த நாட்டையும் தாக்கியது இல்லை, இனியும் தாக்காது - துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு
இந்தியா கடந்த காலத்தில் எந்த நாட்டையும் தாக்கியது இல்லை, எதிர்காலத்திலும் தாக்காது என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள இந்திய வர்த்தக பள்ளியும், வெளியுறவுத் துறை அமைச்சகமும் இணைந்து நடத்திய பொருளாதாரம் பற்றிய கருத்தரங்கில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியா அமைதியை விரும்பும் நாடு. இந்த உலகமே ஒரு குடும்பம், இதில் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளது.
நாங்கள் கடந்தகாலத்தில் எந்த நாட்டையும் தாக்கியது இல்லை, எதிர்காலத்திலும் கூட நாங்கள் அதை செய்யமாட்டோம். ஆனால், இந்தியாவின் உள்விவகாரத்தில் யாராவது தலையிட்டால் இந்தியா தக்க பதிலடி தரும். இதனை அண்டை நாடு (பாகிஸ்தான் பெயரை குறிப்பிடாமல்) உள்பட அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
யாராவது பயங்கரவாதத்துக்கு உதவி செய்வது, நிதி அளிப்பது, பயிற்சி அளிப்பது என்று இருந்தால் அது அவர்களுக்கும், உலக சமுதாயத்துக்கும் கெட்டதாக அமையும். அண்டை நாடுகளுடன் நட்புறவையே நாங்கள் விரும்புகிறோம்.
இந்தியாவின் பரந்த மனப்பான்மை கொண்ட கொள்கை என்னவென்றால், நாங்கள் எந்த நாட்டின் உள்விவகாரத்திலும் தலையிட விரும்புவதில்லை, எந்த நாடும் எங்கள் உள்விவகாரத்தில் தலையிடுவதையும் விரும்புவதில்லை. இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.